FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எல்லாருக்கும் முன்மாதிரி... இணையத்தைக் கலக்கும் சூர்யா - ஜோதிகா!

நடிகர்கள் சூர்யா - ஜோதிகாவின் விடியோ பலரையும் நெகிழ்ச்சியாக்கியுள்ளது...

46 வினாடிகள் முன்பு
சூர்யா - ஜோதிகா
பகிர்:

20 ஆண்டுகால திருமண வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக வெளியான சூர்யா - ஜோதிகா விடியோ வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. இறுதியாக, சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இணைந்து நடித்தவர்கள் தொடர்ந்து அப்படம் வெளியான 3-வது நாளில் திருமணம் செய்துகொண்டனர். திரைத்துறையிலும் பொதுவிலும் பல தம்பதிகளின் ஆதர்ச ஜோடிகளாக சூர்யாவும் ஜோதிகாவும் இன்றுவரை உள்ளனர்.

சூர்யா - ஜோதிகா திருமணம் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதனைக் கொண்டாடும் விதமாக இருவரும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இத்திருமணத்தில் நடிகர் கார்த்தி, சூர்யாவின் மகன், மகள் உள்பட நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

திரைத்துறையினரின் திருமணம் என்றாலே அது நீண்ட காலம் நிலைக்காது என்கிற பார்வையே இன்றும் நீடித்துவரும் சூழலில் 20 ஆண்டுகளாக சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்விலும் பலருக்கும் முன்மாதிரி இணையாக சூர்யா - ஜோதிகா இருப்பதாகப் பலரும் இருவரையும் புகழ்ந்து வருகின்றனர்.

முக்கியமாக நடிகர் மாதவன், “நீங்கள் இருவரும் மிகச்சிறந்த உதாரணம் நண்பர்களே... இன்னும் பல பத்தாண்டுகள் மிக, மிக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ், மலையாள இளம் நடிகைகள் பலரும் நெகிழ்ச்சியாக இருப்பதாகக் கருத்திட்டு வருகின்றனர்.

இந்த விடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றதுடன் பல ஆயிரத்திற்கும் அதிகமான காமெண்ட்களையும் பெற்று வருகிறது.

A video of Suriya and Jyothika, released to celebrate their 20 years of married life, has gone viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments