FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊர் வாயை அடக்க முடியாது... குட்டிக் கதை கூறிய அட்லீ..! விஜய் சேதுபதி தாக்கப்பட்டாரா?

பத்தா படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அட்லீ கூறிய குட்டிக் கதை குறித்து...

18 வினாடிகள் முன்பு
விஜய் சேதுபதி, அட்லீ - படங்கள்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா.
பகிர்:

பத்தா திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ ஊர் வாயை அடைக்க முடியாது என்ற குட்டிக் கதையைக் கூறினார். இது விஜய் சேதுபதிக்கு பதிலடியா என ரசிகர்கள் பேசிவருகிறார்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ’பத்தா’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.

நடிகராக இருந்து கட்சி தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் சி. ஜோசப் விஜய். பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கூறிய கருத்து முதல்வரைப் பற்றியது என சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்தது. இருந்தாலும் விஜய்யின் ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.

இந்த நிலையில், பத்தா படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் இயக்குநர் அட்லீ பேசியது வைரலாகி வருகிறது. அவர் பேசியிருப்பதாவது:

நான் அணிந்திருக்கும் உடைகள், ஆபரணங்கள் எல்லாமே எனக்கு விஜய் அண்ணா கொடுத்தது. இதெல்லாம் என் உழைப்பினால் கிடைத்தது என்றாலும் அவர் இல்லையென்றால் இதெல்லாம் வாய்ப்பே இல்லை. ராஜா ராணி எடுத்தபோது எனது திறமை இருந்தது, புகழ் இருந்தது எல்லாமே சரிதான். ஆனால், அதற்கடுத்து எனது வாழ்க்கையை மாற்றியது விஜய் அண்ணாதான்.

அடுத்து ஜவான் படத்தையும் அவர்தான் செய்ய வைத்தார். மேடைக்கு மேடை அவரைப் பற்றி பேசுவதால் அவர் எனக்கு இன்னொரு பட வாய்ப்பைத் தருவார் என்றெல்லாம் இல்லை; அவர் முதல்வராகிவிட்டார்.

ஊர் வாயை அடக்க முடியாது. ஊர் வாயில் விழுந்து அதனை நம்பி வாழ்ந்துவிட்டுப்போவது முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும். நான் ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். உங்களுக்குப் புரியும்.

துணித் துவைக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் இரண்டு ஊரைத் தாண்டிச் சென்றுதான் துணியைத் துவைக்க வேண்டியிருக்கிறது. அழுக்க மூட்டைகளை கழுதையின் மீது வைத்து செல்லுவார். அதனைப் பார்த்த ஊர்க்காரர் ‘ஒருவர் ஐந்தறிவு கொண்ட கழுதையை இப்படி வதைப்பதா?’ எனத் திட்டினார்களாம்.

இதற்காக அவர் மூட்டையை தனது தலையில் வைத்துச் செல்வார். அடுத்த ஊர்க்காரர்கள் ‘கழுதை இருக்கும்போது தலையில் வைத்துச் செல்கிறாயே உனக்கு அறிவு இருக்கிறதா?’ என்றார்களாம். யார் என்ன சொன்னாலும் கேட்காதே. நீ ஊருக்குப் போக வேண்டுமா செல். வாழ்க்கை உன்னை எங்குக்கொண்டு செல்ல நினைக்கிறதோ அங்கு கொண்டு செல்லும். யார் சொல்வதையும் கேட்காதே. இந்த மாதிரியான சிறிய பொறிகளுக்கு சிக்கிவிடாதே. நாம்தான் ஜென்ஸி. சமூக வலைதளத்தில் அவர் இவரைச் சொல்கிறார்; இவர் அவரைச் சொல்கிறார்... அதெல்லாம் இல்லை. சொல்வதென்றால் நேரிலேயே சொல்லிக்கலாம். நாம் நேர்மையாக இருக்க வேண்டும். தெளிவாக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையினர் அரசியலில் வலுவாக இருக்கும். அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணாதான் என்றார்.

summary

Atlee shares a short story! Was Vijay Sethupathi attacked for Cm Vijay criticism at Big boss show?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments