10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை நாளை வெளியீடு!
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை நாளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிடவுள்ளது குறித்து...
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை நாளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிடுவார்.
10, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகும் வகையில், அவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும்.
இந்த நிலையில், 2026 - 2027 கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை நாளை (அக். 14) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிடுவார் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாடவாரியான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறைத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அரசுத் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
School Education Minister Rajmohan will release the timetable for the Class 10 and 12 public examinations tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.