திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ்
திமுகவுடனான கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் விளக்கம்...
திமுகவுடனான கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தவெக ஆதரவு கேட்டதாக நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு கமிட்டி முடிவெடுத்து அறிவிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் தெரிவித்தாவது:
“தவெகவுடன் ஆட்சி அமைப்பது குறித்து நேற்றிரவு அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவெடுத்துள்ளோம். காங்கிரஸின் முடிவை இன்னும் சற்று நேரத்தில் கட்சிப் பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார்.
தமிழ்நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸும் நுழைந்துவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. விஜய் மதவாத அரசியலுக்கு எதிராக உள்ளார்.
திமுகவுடனான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. அந்த தேர்தல் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
The alliance with the DMK was for the election; it is over! — Congress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.