முகப்பு
வேலைவாய்ப்பு

வருவாய் துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 18 மார்ச் 2022, 3:02 pm IST
பகிர்:

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 13
பணி: அலுவலக உதவியாளர் - 11
பணி: காவலர் - 02 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

Advertisement

Advertisement

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை (அ- பிரிவு) முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் - 637 003.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.04.2022. மாலை 5:45 மணி வரை.

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments