FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தாய், தாய்நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன்: சர்ச்சை பேச்சுக்கு நயினார் விளக்கம்

முதல்வர் விஜய் குறித்து இழிவாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தது குறித்து...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 7:52 pm IST
முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய் குறித்து இழிவாகப் பேசியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "பத்திரிக்கை வெளியீட்டு விழாவின்போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்திரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை.

தாய் மீதும், தாய்நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், "சட்டப்பேரவையில் 'அப்பா எங்கே, அப்பா எங்கே' என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்கு தெரியும்?" என்று பேசினார்.

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மீது வழக்குரைஞர் வர்த்தினி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

summary

BJP leader Nainar Nagenthran clarifies the derogatory allegation made against CM Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments