நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் லிமிடெட் 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலர் வேலை!

மும்பையில் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

மும்பையில் செயல்பட்டு வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 170 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officers (Generalists & Specialists) (Scale-I)

காலியிடங்கள்: 170

துறைவாரியான காலியிடங்கள்:

1. Accounts - 50

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ., எம்.காம் முடித்திருக்க வேண்டும்.

2. Generalists - 120

தகுதி: ஏதாவதொரு துரையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,925 - 96,765

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படும். முதற்கட்டத் தேர்வு அக்டோர் 13 ஆம் தேதி நடைபெறும்.

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலீர், நாகர்கோவில்.முதன்மைத் தேர்வு நவம்பர் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2024

மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

SCROLL FOR NEXT