FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

டிஆர்டிஓ-ல் இளநிலை ஆய்வாளர், ஆராய்ச்சி உதவியாளர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

புணேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 9:00 am IST
டிஆர்டிஓ-ல் இளநிலை ஆய்வாளர், ஆராய்ச்சி உதவியாளர் வேலை - டிஆர்டிஓ
பகிர்:

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்(டிஆர்டிஓ) ஒரு முதன்மை ஆய்வகமான புணேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்(ஏஆர்டிஇ) காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ARDE/JRF-RA/2026

Advertisement

Advertisement

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.37,000

தகுதி: பொறியியல் துறையில் Electronics,Electronics & Communication, Applied Electronics,Signal Processing, Microwave, Power Electronics, Electronics & Instrumentation, Computer Science, Computer Engineering,Computer Science & IT,Information Science, Informatices & Net-working, Data Science, Cyber Security,Software Engineering, Mechanical, Metallurgy, Material Science, Manufacturing Engineering, Production Engineering, Aeronautical, Aerospace Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் நெட், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Asociate

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.67,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, அதனுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டப்பட்ட பயோ டேட்டாவை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, Armament Research & Development Establishment, Armament Post, Pashan, Pune - 411 021.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

ARDE Pune invites applications from young and meritorious Indian Nationals who desire to pursue defence related research as Junior Research Fellow (JRF) and Research Associate (RA).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments