இஸ்ரோவில் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இஸ்ரோவில் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி பணிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
இஸ்ரோவின் ஒரு முக்கிய மையமாகவும், நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக விண்வெளிப் பயன்பாட்டு மையம் (எஸ்ஏசி) திகழ்கிறது. இந்நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்தே, விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கோள் ஆய்வுகளை மேற்கொள்வதோடு, தேசிய வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையையும் பின்பற்றி வருகிறது.
இந்த மையம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் தொழில்நுட்பங்கள், தொலை உணர்வு, மைக்ரோவேவ், மென்பொருள் பொறியியல், இயந்திரப் பொறியியல், சிவில் பொறியியல் மற்றும் பிற நிர்வாகப் பணிகள் எனப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
மேலும், சவாலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற, அதிநவீன வசதிகள் மற்றும் சுதந்திரமான, வெளிப்படையான பணிச்சூழலையும் வழங்குகிறது.
Advertisement
Advertisement
இந்நிறுவனத்தில் தற்போது ஆராய்ச்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: SAC:02:2026
பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 33
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.37,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.42,000
தகுதி: குறைக்கடத்தி தொழில்நுட்பம், குவாண்டம், மின்னணுவியல், எண்ணிம மின்னணுவியல், சிக்னல் செயலாக்கம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், ஒளியியல், ஒளியியல் மின்னணுவியல், வளிமண்டல அறிவியல், கடலியல், வானிலை ஆய்வு, கணினி அறிவியல், புவித் தகவல் அறிவியல், தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு, புவி அறிவியல், புவித் தொழில்நுட்பப் பொறியியல், புவி இயற்பியல் பிரிவில் எம்இ, எம்.டெக் தேர்ச்சி அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Research Associate
காலியிடங்கள்: 8
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை-1-க்கு மாதம் ரூ.58,000, நிலை-2-க்கு மாதம் ரூ.61,000, நிலை-3-க்கு மாதம் ரூ.67,000
தகுதி: கடல்சார் அறிவியல், கடல் அறிவியல், சுற்றுச்சூழல் மாதிரியாக்கம், வளிமண்டல அறிவியல், வானிலை ஆய்வு, புவி மண்டல அறிவியல், இயற்பியல் அல்லது அது சார்ந்த துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Scientist - I
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.56,000
தகுதி: புவி இயற்பியல், பயன்பாட்டு புவி இயற்பியல் அல்லது அது சார்ந்த துறைகளில் முனைவர் பட்டம் அல்லது சூழலியல், சுற்றுச்சூழல் அறிவியல், வனவியல் அல்லது அது சார்ந்த துறைகளில் முனைவர் பட்டம் அல்லது புவி-தகவல் அறிவியல் அல்லது அது சார்ந்த துறைகளில் எம்இ, எம்.டெக் அல்லது மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங்கில் சிறப்புத் திறனுடன் கூடிய ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் அல்லது அது சார்ந்த துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sac.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
SAC is a major centre of ISRO and a premier research and development institute of the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.