வங்கியில் வேலை வேண்டுமா..? பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா-ல் நிரப்பப்பட உள்ள 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக....
நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா. வதோதராவை தலைமை அலுவலமாகக் கொண்டு நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள 1,100 அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: BOB/HRM/REC/ADVT/2026/17
Advertisement
Advertisement
பணி: Wealth Executive
காலியிடங்கள்: 1000
சம்பளம்: மாதம் ரூ.48,480-85920
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணிக்குரிய சான்றிதமும், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.9.2026 தேதியின்படி 22 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்
பணி: Credit Analyst(C&IC)
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று சிஏ முடித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.9.2026 தேதியின்படி 21 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த விபரம் அடங்கிய நுழைவுச் சீட்டு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடை பெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர்,விருதுநகர், சேலம்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.175. இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்ட ணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.9.2026
Apply Online for 1,100 Wealth Executive and Credit Analyst Posts at Bank of Baroda.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.