மத்திய ஆயுதக் காவல் படைகளில் உதவி ஆய்வாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 1,871 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு குறித்து...
தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 1,871 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வம் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்கள் பார்ப்போம்...
மொத்த காலிப்பணியிடங்கள்: 1,871
Advertisement
Advertisement
பணி: Sub Inspector(GD) in CAPFs
காலியிடங்கள்: 1320
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
பணி: Sub Inspector (Executive)in Delhi Police -Male
காலியிடங்கள்: 205
பணி: Sub Inspector(Executive)in Delhi Police -Male-Female
காலியிடங்கள்: 112
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
பணி: Sub Inspector(FIRE)- (Male) in CISF
காலியிடங்கள்: 234
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: 30.9.2026 தேதியின்படி பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.8.2026 தேதியின்படி சிஐ எஸ்.ப் பிரிவில் சப் -இன்ஸ்பெக்டர் (தீயணைப்பு) பணிக்கு மட்டும் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.8.1996-க்கு முன்போ, 1.8.2008-க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. மற்ற பணிகளுக்கு 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.8.2001-க்கு முன்போ,1.8.2006-க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை வயதுவரம்பில் தளர்வு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு (தாள்-I,தாள்-II),மருத்துவ பரிசோதனை, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி .
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
The Staff Selection Commission will hold an Open Competitive Examination for recruitment of Sub-Inspectors in Delhi Police and Central Armed Police Forces (CAPFs)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.