FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருச்சி மாவட்ட இளைஞர் நீதிமன்றத்தில் வேலை: 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி மாவட்ட இளைஞர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

திருச்சி மாவட்ட இளைஞர் நீதிமன்றத்தில் வேலை
பகிர்:

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் ஒரு ஆண்டு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant cum Bench Clerk

காலியிடம்: 1

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்கும் பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.9.2026 தேதியின்படி 42-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Assistant cum Record Clerk

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.9.2026 தேதியின்படி 42-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Office Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.9.2026 தேதியின்படி 42-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் எந்தெவாரு முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications Invited for various Posts under Mission Vatsalya Scheme on Contract Basis – Tiruchirappalli District Child Protection Unit (DCPU)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments