பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை.
போட்டியின் போது சீறிப்பாயந்த ஒரு காளையை வீரத்தோடு அடக்கும் மாடுபிடி வீரர்கள்.
நீண்ட நேரம் துள்ளிக் குதித்து காளை சட்டென்று மாடுபிடி வீரர்களை கீழே தள்ளிவிட்டு பறந்தது.
காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்.
விழாவில் சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், அதனை மடக்கிப்பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.
மிகுந்த வீரத்தோடு காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்.
மாடுபிடி வீரரை கீழே தள்ளிவிட்டு பறந்த காளை.
ஜல்லிக்கட்டு விழாவில் 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், அதனை மடக்கிப்பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
19 காளைகளை அடக்கிய மணி என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு பைக் பரிசளிக்கப்பட்டது.
15 காளைகளை அடக்கிய ராஜா மூன்றாம் பரிசை தட்டி சென்றார்.
சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.