FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

15.8.1976: இன்று சுதந்திர தினம்: கோட்டையில் கவர்னர் கொடியேற்றுவார்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:29 am IST
15.8.1976 - Dinamani
பகிர்:

சென்னை, ஆக. 14 - ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு கவர்னர் சுகாதியா தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.

முன்னதாக, விமானப்படை அளிக்கும் அணி வகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிடுவார். ஆனால் முப்படையினர் அணிவகுப்பு எதுவும் இராது.

மாவட்டத் தலைநகரங்களில் ஜில்லாக் கலெக்டர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பர். ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் சிவகாசியில் தேசியக் கொடியை ஏற்றுவார்.

Advertisement

Advertisement

பொது கட்டிடங்களில் விசேஷ விளக்கு அலங்காரங்கள் எதுவும் இராது. சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் எதுவும் இராது. ...

ராஷ்டிரபதியின் சுதந்திர செய்தி - சுயக் கட்டுப்பாடு சகாப்தம் மலர, சில ஒழுக்க நியதிகளை ஏற்கவேண்டும் என்கிறார்

புதுடில்லி, ஆக. 14 - அவசர நிலைப் பிரகடனத்தால் ஏற்பட்டுள்ள நற்பலன்களை "தாமாக முன் வந்து தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறியாக" நாடு இனி பேணிப் பாதுகாத்து வரவேண்டும் என்று ராஷ்டிரபதி பக்ருத்தீன் அலி அகமது இன்று கூறினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச மக்களுக்கு அவர் இன்றிரவு நிகழ்த்திய ரேடியோ உரையில் இவ்வாறு சொன்னார்.

சில ஒழுக்க நியதிகளை, சம்பந்தப்பட்ட அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒரு புதிய சுய கட்டுப்பாடு சகாப்தம் மலர முடியும் என்றும் ராஷ்டிரபதி கூறினார்.

"அவசர நிலை பிரகடனத்தினால் எல்லாத் துறைகளிலும் குறிப்பாக கல்வித் துறை, தொழில் துறை ஆகியவற்றில் கட்டுப்பாடு, பணி ஆகியவை சம்பந்தமாக ஏற்பட்டுள்ள நற்பயன்கள் பொதுவாக உணரப்பட்டு பரவலாக வரவேற்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சொன்னார். ...

summary

15.8.1976: Today is Independence Day; the Governor will hoist the flag at the Fort.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments