FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

தீராத மலச்சிக்கலையும், வாயுத் தொல்லையையும் போக்க உதவும் உணவு

முதலில் முருங்கைக் கீரையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். வேர்கடலையையும் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.

Updated On : 4 செப்டம்பர் 2019, 11:40 am IST
பகிர்:

வேர்க்கடலைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

வேர்க் கடலை மாவு - கால் கிலோ
முருங்கை இலைப்பொடி -  20 கிராம்
பால் - கால் லிட்டர்
தண்ணீர் - அரை லிட்டர்
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு

Advertisement

Advertisement

செய்முறை
 
முதலில் முருங்கைக் கீரையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். வேர்கடலையையும் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் வேர்கடலை மாவை கரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வெந்து நிறம் மாறிய உடன் முருங்கை இலைத் தூள், பால் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து அனைத்தையும் நன்கு கலக்கி இறக்கி வைக்கவும். பின்பு ஆறியதும் இதனை அருந்தலாம்

பயன்கள்
 
இந்தக் வேர்கடலைக் கஞ்சியை அதிகப்படியான பசியுணர்வு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பசியுணர்வை சீராக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்தக் கஞ்சியை அருந்துவதன் மூலம் மலச்சிக்கல் நீங்கும். வாயுத் தொல்லையால் பாதிக்கபட்டவர்கள் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலில் வாயு தங்காது

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments