FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகள் திருமணம்: விருந்தினர்களை அழைத்துவர 50 விமானங்களை ஏற்பாடு செய்த நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணம் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

25 ஜனவரி 2024, 12:01 pm IST
பகிர்:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணம் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு மிக மிக முக்கியமான நபர்களை அழைத்து வருவதற்காக 50 தனியார் விமானங்களின் இருக்கை
கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டன.
நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் நாகபுரிக்குச் செல்வதற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் விமானங்களில் காலி இருக்கைகள் இல்லை என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், நடிகை ஹேமமாலினி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, குமார மங்கலம் பிர்லா ஆகியோர் கட்கரியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் முக முக்கியமான நபர்கள் ஆவர்.
இவர்களைப் போன்ற மிக மிக முக்கியமான நபர்களை அழைத்து வருவதற்காக 50 விமானங்களை திருமண வீட்டார் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர்.
இதேபோல், இந்தத் திருமண நிகழ்ச்சியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். தனது இரண்டு மகன்களுக்கும் முன்பு வெகு விமரிசையாக நாகபுரியில் நிதின் கட்கரி திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments