ஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!
ஷார்ஜாவில் இந்தியர் கொலை செய்யப்பட்டு 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் மீட்பு வழக்கு பற்றி..
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் என்பவர், ஷார்ஜாவில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் மகனைக் காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்தள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஆல்வின் பணியாற்றி வந்ததாகவும், ஜூலை 20ஆம் தேதி முதல் அவர் உறவினர்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் சகோதரர் குறிப்பிட்டுளள்ர்.
ஆனால், ஆல்வின் செல்போனிலிருந்து உறவினர்களுக்கு தகவல் மட்டும் வந்துள்ளது. அதில், தான் உடல் நலக் குறைவாக இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதால் பேச முடியவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆனால், ஆல்வின் எப்போதும் வாய்ஸ் மெசேஜ்தான் அனுப்புர், செய்திகளை டைப் செய்து அனுப்ப மாட்டார் என்பதால், அவரது சகோதரருக்கு சந்தேகம் வந்து புகார் அளித்த போதுதான், ஆல்வின் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அவரை மீண்டும் மீண்டும் செல்போனில் அழைக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால், ஒரு முறையும் போனை எடுக்கவும் இல்லை, எங்களை அழைக்கவும் இல்லை என்கிறார் ஆல்வின் சகோதரர்.
பிறகுதான், ஷார்ஜாவில் பணியாற்றும் ஆல்வினின் நண்பரைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது ஆல்வின் இந்தியாவுக்குச் சென்று விட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், ஆல்வின் இந்தியாவுக்கும் வராத நிலையில், அவரது பாஸ்போர்ட் தரவுகள் மூலம் அவர் ஷார்ஜாவில்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஷார்ஜா காவல்துறை விசாரணை நடத்தியதில், ஆகஸ்ட் 12ஆம் தேதி சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள், ஒன்பது துண்டுகளாக வெட்டப்பட்டு மீட்கப்பட்ட உடல் ஆல்வினுடையது என்றும், அந்த காரும் ஆல்வினுக்குச் சொந்தமானது என்றும் தெரிய வந்தது. டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆல்வின், 20 ஆண்டுகளுக்கு முன்பு டினா என்பவரை திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் துபைல் 10ம் வகுப்பு படிக்கும் நிலையில், டினா ஆசிரியராக துபையில் பணியாற்றி வருகிறார் என்றும் தற்போது டினா மற்றும் அவரது மகனின் இருப்பிடம் பற்றி தகவல் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
Indian man murdered in Sharjah; body chopped into 9 pieces! Wife and son missing!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.