ஆந்திர முதல்வர் மீது பிணையில்லா வாரண்ட்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் சேர்ந்த 14 பேர் மீது மகாராஷ்டிர நீதிமன்றம் பிணையில்லா வாரண்ட்டை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் சேர்ந்த 14 பேர் மீது மகாராஷ்டிர நீதிமன்றம் பிணையில்லா வாரண்ட்டை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் உள்ள பாப்லி ஆற்றின் மீது மகாராஷ்டிர அரசு அணைகட்ட முடிவு செய்தது. அதை எதிர்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து 14 பேர் தர்னா மற்றும் பாத யாத்திரை மேற்கொண்டனர். அதற்காக ஆந்திர முதல்வர் மற்றும் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் எவ்வித நடவடிக்கையையும் மகாராஷ்டிர அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக மகாராஷ்டிரத்தில் உள்ள தர்மாபாத் நீதிமன்றம் வியாழக்கிழமை மாலை ஆந்திர முதல்வர் மற்றும் 14 பேர் மீது பிணையில்லா வாரண்ட்டை வெளியிட்டுள்ளது. வரும், 21-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து தர்னாவில் ஈடுபட்ட மற்ற 14 பேரும் தர்மாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது.
இத்தகவலை வியாழக்கிழமை மாலை பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் ஆந்திர முதல்வர் இருந்தபோது, அவருக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.