FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கெளரி லங்கேஷ் கொலையில் கைதானோரிடம் ஏடிஎஸ் விசாரணை

இடதுசாரி எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இருவரை, விசாரணைக்காக மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) காவலில் எடுத்துள்ளது. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

இடதுசாரி எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இருவரை, விசாரணைக்காக மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) காவலில் எடுத்துள்ளது. 
மகாராஷ்டிரத்தில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் ஏதேனும் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சதிச்செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து 8 நபர்களை ஏடிஎஸ் படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பாரத் குர்னே, சுஜீத் குமார் ஆகியோரிடம் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், எஸ்ஐடி குழுவினரிடம் இருந்து அந்த இருவரையும் காவலில் எடுத்து கடந்த புதன்கிழமை முதல் ஏடிஎஸ் படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த 8 நபர்களுடன், இந்த இருவரும் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக தெரியவந்ததாகவும், அதன் காரணமாக கெளரி லங்கேஷ் கொலை தவிர்த்து, வேறு ஏதேனும் சதிச்செயல்களில் இருவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டியுள்ளது என்று ஏடிஎஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, சுஜீத் குமார், பாரத் குர்னே ஆகிய இருவரையும் பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து, மும்பையில் உள்ள, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைக்கான நீதிமன்றத்தில் ஏடிஎஸ் படையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, இருவரையும் 17-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments