FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது பிணையில்லா வாரண்ட்: மகாராஷ்ட்ரா நீதிமன்றம் அதிரடி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் சேர்ந்த 14 பேர் மீது மகாராஷ்ட்ரா நீதிமன்றம் பிணையில்லா வாராண்டை அதிரடியாக வெளியிட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் சேர்ந்த 14 பேர் மீது மகாராஷ்ட்ரா நீதிமன்றம் பிணையில்லா வாராண்டை அதிரடியாக வெளியிட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் உள்ள பாப்லி ஆற்றின் மீது மகாராஷ்ட்ரா அரசு அணைகட்ட முடிவு செய்தது. அதை எதிர்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து 14 பேர் தர்ணா மற்றும் பாதயாத்திரை மேற்கொண்டனர். அதற்காக ஆந்திர முதல்வர் மற்றும் 14 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 

அதன்பின் எவ்வித நடவடிக்கையும் மகாராஷ்ட்ர அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக மகாராஷ்டாராவில் உள்ள தர்மாபாத் நீதிமன்றம் வியாழக்கிழமை மாலை ஆந்திர முதல்வர் மற்றும் 14 பேர் மீது பிணையில்லா வாரண்ட் வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

வரும், 21-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட மற்ற 14 பேரும் தர்மாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த செய்தி வியாழக்கிழமை மாலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்க திருமலை ஏழுமலையான் கோயிலுக்குள் ஆந்திர முதல்வர் இருக்கும் போது அவருக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments