FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காந்தி ஜெயந்தி விழாக்களில் பட்டாசு வெடிக்கத் தடை: கோவா முதல்வர்

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கும் நடைமுறைகளுக்குத் தடை விதித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 2 அக்டோபர் 2019, 4:02 pm IST
பகிர்:

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கும் நடைமுறைகளுக்குத் தடை விதித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினவிழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில்,  காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று அறிவித்துள்ளார்.  கோவாவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் பேசிய அவர், 'காந்தி ஒரு உண்மையான சுற்றுச்சூழல் ஆர்வலர். பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. எனவே, காந்தி ஜெயந்தி விழாவில் பட்டாசு வெடிப்பதை அனைவருமே தவிர்க்க வேண்டும் என்று நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அரசு ஊழியர்கள் இதை கவனத்தில் கொண்டு மற்றவர்களிடமும் எடுத்துரைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முக்கியத்துவம் அளித்து வருவதாக கோவா அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசு அலுவலகங்களில் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து சமீபத்தில் கோவா அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments