FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாராவியில் புதிதாக 7 பேருக்கு கரோனா

​தாராவியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 20 ஜூன் 2020, 9:53 pm IST
கோப்புப்படம்
பகிர்:


தாராவியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் தாராவிப் பகுதியில் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மும்பை:

Advertisement

Advertisement

மும்பையில் இன்று புதிதாக 1,197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 136 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,265 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,559 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 610 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,867 ஆக உயர்ந்துள்ளது. 28,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments