FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழையா? சரி செய்ய வழி இருக்கு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது நமது தகவல்களை கோவின் இணையதளத்தில் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை அதிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது.

28 ஜனவரி 2024, 9:32 am IST
கரோனா தடுப்பூசி சான்றிதழில் எழுத்துப் பிழையா? கவலை வேண்டாம்
பகிர்:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது நமது தகவல்களை கோவின் இணையதளத்தில் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை அதிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது.

ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது, கூட்ட நெரிசல் அல்லது ஏதேனும் ஒரு சில காரணங்களால், நமது தகவல்களை பதிவு செய்யும் போது சில பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன.

அந்த பிழைகளை திருத்திக் கொள்ளவும், நாம் கரோனா தடுப்பூசி செலுத்தும் போது அளித்த செல்லிடப்பேசி எண்ணை மாற்றவும் கூட கோவின் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அவற்றை மேற்கொள்வது எளிதும் கூட.

Advertisement

Advertisement

இனி கோவின் இணையதளம் வாயிலாக பிழைகளைக் களைவது குறித்துப் பார்க்கலாம்..

செல்லிடப்பேசி எண்களை ஒன்றிணைப்பது:

ஒருவர் இரண்டு செல்லிடப்பேசி எண்களை வைத்திருப்பார். முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் போது ஒரு எண்ணையும், மற்றொரு தடுப்பூசி செலுத்தும் போது தவறாக மற்றொரு எண்ணையும் அளித்துவிடுவார். இதனால், இரண்டு தவணைகளுமே முதல் தவணை என்பது போல குறுந்தகவல் அனுப்பப்படும். இதனைக் களைய எளிய வழி உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் போது பயன்படுத்திய செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு கோவின் இணையதளத்துக்குச் சென்று அதில் ரைஸ் ஆன் இஷ்யூ (raise an issue) என்பதை க்ளிக் செய்யவும்.

அதில், எனது கரோனா தடுப்பூசி சான்றிதழை ஒன்றிணைத்து முழுமையான சான்றிதழ் பெற (மெர்ஜ் மை மல்டிபிள் டோஸ் சர்டிபிகேட்ஸ் டூ கெட் ஃபைனல் வேசினேஷன் சர்டிபிகேட்) பெற என்ற வாய்ப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதில் இந்த பக்கம் வரும். கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை உள்ளீடவும். முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான தகவல்களையும், இரண்டாவது தடுப்பூசி செலுத்தியதற்கான தகவல்களையும் சரியாக உள்ளீடு செய்து, சப்மிட் ரெக்வஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு, உங்களுக்கு இரண்டு கரோனா தடுப்பூசி செலுத்தியது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் கிடைக்கும்.

செல்லிடப்பேசி எண்ணையே மாற்ற வேண்டுமா? வழி இருக்கிறது.

கோவின் இணையதளத்தில், நீங்கள் தடுப்பூசி செலுத்தும் போது பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு உள்ளே நுழையுங்கள்.

அங்கு ரைஸ் ஆன் இஷ்யூ என்ற பட்டனைக் கிளிக் செய்து, அதற்குள் செல்லிடப்பேசி எண்ணை மாற்றியமைக்க (டிரான்ஸ்ஃபர் எ மெம்பர் டூ நியூ மொபைல் நம்பர்) என்ற வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.

அப்போது இந்தப் பக்கம் விரியும். அதில், பயனாளருடைய பெயர் மற்றும் மாற்ற வேண்டிய செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு, கன்டின்யூ என்பதை அழுத்தவும்.

செல்லிடப்பேசி எண் மாற்றப்பட்டதற்கான உறுதிப்படுத்தும் தகவல் வரும். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு கரோனா தடுப்பூசி சான்றிதழில் பதிவேற்றப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை ஒரே ஒரு முறை தான் மாற்றியமைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கரோனா சான்றிதழில் இருக்கும் எழுத்துப் பிழைகளை எவ்வாறு களைவது?

கோவின் இணையதளத்தின் வாயிலாக, கரோனா தடுப்பூசி சான்றிதழில் இருக்கும் எழுத்துப் பிழை உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

அதற்கு, கோவின் இணையதளத்தில் ரைஸ் ஆன் இஷ்யூ என்பதை க்ளிக் செய்து, அதில், சான்றிதழில் பெயர், வயது, பாலினம், அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள (கரெக்ஷன் இன் மை சர்டிஃபிகேட் ரிகார்டிங் நேம்/ஏஜ்/ஜென்டர்/போட்டோ ஐடி) என்பதை கிளிக் செய்யவும்.

மேலும் அறிந்துகொள்ள.. இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்

அதை க்ளிக் செய்ததும், அந்த நபரின் விவரங்கள் கொண்ட பக்கம் வரும். அதில் எந்த விவரம் தவறாக இருக்கிறதோ அதை மாற்றம் (சேஞ்ச்) செய்து கொள்ளலாம். நினைவில் கொள்ளுங்கள், இதிலிருக்கும் விவரங்களில் ஏதேனும் இரண்டு விவரங்களில் மட்டுமே பிழைதிருத்தம் செய்ய முடியும். திருத்தம் செய்ததும் கன்டின்யூவை கிளிக் செய்யவும். நீங்கள் மேற்கொண்ட பிழைதிருத்தம் உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments