FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கர்ப்பிணிகளும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய அரசு

கர்ப்பிணிகளும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

28 ஜனவரி 2024, 9:00 am IST
கர்ப்பிணிகளும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய அரசு
பகிர்:


புது தில்லி: நாட்டில் இனி கர்ப்பிணிகளும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

கர்ப்பிணிகளுக்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கரோனா தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ளதால், அவர்களுக்கும் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளும் உரிமையை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அறிவுறுத்தலில் சில மாற்றங்களை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது என்று தேசிய நோய் எதிர்ப்பு சக்தி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று மத்திய அரசு நேற்று இந்த முடிவை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments