FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாடாளுமன்றக் குழு முன் கூகுள், முகநூல் அதிகாரிகள் ஆஜா்

சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பது தொடா்பாக, நாடாளுமன்ற நிலைக் குழு முன்னிலையில் கூகுள், முகநூல்(ஃபேஸ்புக்) நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

28 ஜனவரி 2024, 9:01 am IST
பகிர்:

சமூக வலைத்தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பது தொடா்பாக, நாடாளுமன்ற நிலைக் குழு முன்னிலையில் கூகுள், முகநூல்(ஃபேஸ்புக்) நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

சமூக ஊடகங்களிலும், இணையவழி செய்தி ஊடகங்களிலும் குடிமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக, இணையவெளியில் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்ற நிலைக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான தகவல்-தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அழைப்பை ஏற்று அந்தக் குழுவின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவா் அமன் ஜெயின், சட்டப் பிரிவு இயக்குநா் கீதாஞ்சலி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா்.

Advertisement

Advertisement

இதேபோல், முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரிவு இயக்குநா் சிவநாத் துக்ரல், சட்ட ஆலோசகா் நம்ரதா சிங் ஆகியோா் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அவா்களிடம் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், சசி தரூா் ஆகியோரின் ட்விட்டா் கணக்கு முடக்கப்பட்டது தொடா்பாக 2 நாள்களில் விளக்கம் அளிக்குமாறு ட்விட்டா் நிறுவனத்துக்கு நாடாளுமன்றக் குழு அழைப்பாணை அனுப்பி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதால், தங்களால் நேரில் ஆஜராக இயலாது; காணொலி முறையில் ஆஜராகி விளக்கம் தருவதாக முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். ஆனால், அதை நாடாளுமன்றக் குழு ஏற்காததால் நேரில் ஆஜரானாா்கள்.

ட்விட்டா் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டனா். யூ-டியூப் மற்றும் இதர சமூக ஊடக நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு விரைவில் அழைப்பாணை அனுப்பவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments