ம.பி.யில் ஒரேநாளில் 3.6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை
மத்தியப் பிரதேசத்தில் ஒரேநாளில் 12-14 வயதுக்குட்பட்ட 3.67 லட்சம் சிறார்களுக்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரேநாளில் 12-14 வயதுக்குட்பட்ட 3.67 லட்சம் சிறார்களுக்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் சந்தோஷ் சுக்லா கூறுகையில்,
நாட்டிலேயே இது ஒரு சாதனை என்று கூறினார். 12-14 வயதுப் பிரிவினருக்கான தடுப்பூசி இயக்கத்தைப் புதன்கிழமை தொடங்கிவைத்த முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மாநில மக்கள் மீண்டும் ஒரு சாதனையைப் படைக்கப் பொதுமக்கள் பங்கேற்பதற்கான சிறந்த உதாரணத்தைக் காட்டியுள்ளனர் என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த சிறார்களுக்கும், பெற்றோர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய நாளிலேயே 12-14 வயதிற்குட்பட்ட 3,37,883 கோர்பெவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மத்தியப் பிரதேசத்தில் ஒரேநாளில் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.