FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கூட்டு பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை விடியோ எடுத்த மக்கள்

பலாத்காரத்துக்கு உள்ளாகி, அரைகுறை ஆடையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு நடந்து வந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் விடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 22 செப்டம்பர் 2022, 3:01 pm IST
கூட்டு பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை விடியோ எடுத்த மக்கள்
பகிர்:


பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஐந்து பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, அரைகுறை ஆடையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு நடந்து வந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் விடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் இந்த நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவருக்கும் அவர் மீது துணியை எடுத்துப் போர்த்தி பத்திரமாக அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இது மட்டுமல்ல, தாங்கள் எடுத்த விடியோக்களை சமூக வலைத்தளத்திலும் பரப்பி, தங்களது மனிதநேயம் எந்த அளவுக்கு மாண்டு மண்ணோடு மண்ணாகியிருக்கிறது என்பதையும் அவர்களே இந்த நாட்டுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியும் விட்டனர்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கூறுகையில், மிகவும் மோசமான நிலையில், நள்ளிரவில் சிறுமி வீட்டுக்கு வந்தார். உடனடியாக காவல்நிலையத்தில் புகாரளித்தும் பயன் இல்லை. மாவட்ட காவல்துறை தலைமையகத்துக்குச் சென்று போராடிய பிறகே முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, குற்றவாளிகளின் குடும்பத்தினர் எங்களைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கிறார்கள் என்கிறார் பரிதாபத்தோடு.

இது குறித்து காவலர்கள் கூறுகையில், அருகில் உள்ள கிராமத்தில் நடந்த திருவிழாவுக்குச் சென்ற பெண்ணை ஐந்து பேர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அவரது கூச்சலைக் கேட்டு ஓடி வந்த கிராமத்தினரைப் பார்த்ததும் பெண்ணின் ஆடைகள் உள்ளிட்ட உடைமைகளை குற்றவாளிகள் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதையடுத்தே பாதிக்கப்பட்டபெண் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆடையில்லாமல் நடந்தே வீட்டுக்கு வந்துள்ளார் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments