நேற்று 13; இன்று 10: அந்தமானை அதிரவைக்கும் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் எழுந்துள்ளது.
அந்தமான்: அந்தமான் நிகோபர் தீவில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் எழுந்துள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் அளித்த தகவலின்படி, நேற்று மட்டும் 13 முறை போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளன. நேற்று காலை 11.05 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான நிலநடுக்கம், இரவு 11.37 மணியளவில் 4.1ஆக 13வது முறையாக பதிவானது.
இதையும் படிக்க | மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
Advertisement
Advertisement
தொடர்ச்சியாக, இன்று அதிகாலை 12.03 மணியளவில் 4.6 ஆகப் பதிவான நிலநடுக்கம், தொடர்ச்சியாக 12.46, 1.07, 1.30, 1.48, 2.13, 2.34, 2.54, 5.57, 8.05 என அடுத்தடுத்து இதுவரை 10 முறை பதிவாகியுள்ளது.
இரண்டு நாள்களில் 23 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் தேசிய நில அதிர்வு மையத்தால் இதுவரை விடுக்கப்படவில்லை.
இருப்பினும், சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.