கேரளத்தில் பாஜகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது: பிருந்தா காரத் விமர்சனம்!
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது என்று பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது என்று பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார்.
கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிக்க | கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளே வறட்சியை விரும்புகின்றனர்: கர்நாடக அமைச்சர் பேச்சு!
Advertisement
Advertisement
அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து திங்கள்கிழமை பேசிய சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பேசும் அதே வார்த்தைகளையே காங்கிரஸ் கட்சியும் பேசுகிறது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சியானது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது.
தேசிய அளவில் மோடிக்கு எதிராகப் போரிடுவதைப் பற்றி காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் கேரளத்தில் அப்படி இல்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். காலையில் என்ன சொல்கிறதோ, அதையே மாலையில் காங்கிரஸ் கட்சியும் சொல்கிறது.
இதுதான் கேரளத்தில் நடக்கக்கூடிய அரசியல். மோடிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தேசியக் கட்சி இவ்வாறு நடந்துகொள்வதற்கு தேசிய கட்சி இதற்கு வெட்கப்பட வேண்டும்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது, “கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்கள் மற்றும் சிபிஐஎம் கட்சியினரால் தாக்கப்படுகின்றனர். தேசிய அளவில் மோடியின் சர்வாதிகார அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். கெடுவாய்ப்பாக கேரளத்தில் பினராயி விஜயனின் அரசும் அதைப்போலவே செயல்பட்டு வருகிறது.” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.