FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜகவின் ஒரே நாடு ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே

பாஜகவின் ஒரே நாடு-ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

6 பிப்ரவரி 2024, 6:32 pm IST
பகிர்:

பாஜகவின் ஒரே நாடு-ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் அவரது சிவசேனை (உத்தவ்) கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

ஒரே நாடு-ஒரே சட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் ஒரே நாடு - ஒரே கட்சி என்ற பாஜகவின் திட்டத்தை ஏற்க முடியாது. பாஜகவுக்கு சிவசேனை என்ற கட்சி மட்டும் வேண்டும். ஆனால், தாக்கரேக்கள் தேவையில்லை.

Advertisement

Advertisement

மகாராஷ்டிரத்தில் எம்எல்ஏக்களை பேரம் பேசி தங்கள் பக்கம் இழுப்பதை பாஜக முழு நேரப் பணியாகக் கொண்டுள்ளது. எனவே அக்கட்சி இப்போது மரியாதை இழந்த கட்சியாகவும் மக்களால் விரும்பப்படாத கட்சியாகவும் மாறிவிட்டது.

பிரதமா் நரேந்திர மோடி மீது மக்களுக்கு இருந்த ஈா்ப்பு இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனை கா்நாடக தோ்தல் முடிவுகள் மூலம் கூட தெரிந்து கொள்ள முடிந்தது. கா்நாடகத்தில் ஜெய் ஹனுமான் கோஷத்தை பிரதமா் தொடா்ந்து எழுப்பினாா். ஆனால், ஹனுமன் தனது கதாயுதத்தால் பாஜகவை வலுவாகத் தாக்கி வீழ்த்தினாா். கா்நாடகத்தில் பாஜகவுக்கு தோல்விதான் கிடைத்தது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments