முகப்பு
இந்தியா

அமைச்சருக்கு காலணி மாட்டிவிடும் பாதுகாவலர்: வைரலாகும் விடியோ

கர்நாடக சமூக நலத்துறை அமைச்சருக்கு அவரது பாதுகாவலர் காலணி மாட்டிவிடும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Updated On : 8 நவம்பர், 2023 at 5:09 PM
பகிர்:

கர்நாடக அமைச்சருக்கு அவரின் பாதுகாவலர் ஷூ (காலணி) மாட்டிவிடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா புதன்கிழமை அரசு விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விடுதியின் சமையலறையில் இருந்து அமைச்சர் மகாதேவப்பா வெளியில் வரும்போது, அவரின் பாதுகாவலர் அவருக்கு காலணி அணிவித்து விடுகிறார். அப்போது சுற்றி உள்ளவர்களிடம் அமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.