செப். 18 பழைய கட்டடத்தில்; 19-ல் புதிய நாடாளுமன்றத்தில்.. காரணம்?
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப். 18-ல் தொடங்கவுள்ள நிலையில், இரண்டாம் நாள் கூட்டம்தான் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப். 18-ல் தொடங்கவுள்ள நிலையில், இரண்டாம் நாள் கூட்டம்தான் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற செப்.18 முதல் 22-ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பட்ஜெட், மழைக் காலம், குளிா்கால கூட்டத் தொடா் என நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஆண்டுக்கு மூன்று முறை கூடும். ஆனால், தற்போது முதல் முறையாக சிறப்புக் கூட்டத் தொடா் கூட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | நிகழ்ச்சி நிரல் வெளியிட வேண்டும்: மோடிக்கு சோனியா கடிதம்
இந்த நிலையில், செப்டம்பர் 18-ஆம் தேதி பழைய கட்டத்திலேயே கூட்டத்தொடர் தொடங்கும் என்றும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19-ஆம் தேதி(தமிழகத்தில் செப்.18 விநாயகர் சதுர்த்தி) இரண்டாம் நாளுக்கான அமர்வு புதிய கட்டடத்தில் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28-ஆம் தேதியே திறந்து வைத்தாலும், மழைக்கால கூட்டத்தொடர் பழைய கட்டடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.