FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து; 5 பேரை மீட்கும் பணி தீவிரம்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானது.

22 December 2024, 2:33 am IST
மொஹாலியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
பகிர்:

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டடத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவா் மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மொஹாலிக்கு அருகேயுள்ள சோஹானா பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளான செய்தி கேட்டு துயரமடைந்தேன். இந்த விபத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் பல்வேறு மீட்புக் குழுக்கள் ஈடுபடுபட்டுள்ளன. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

அருகில் உள்ள நிலத்தை தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது கட்டடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, மருத்துவா்கள் குழு ஆகியவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments