FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மறைவுகள் 2024

ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசைக் கலைஞரும், பிரபல பாடகருமான உஸ்தாத் ரஷீத் கான் (55) புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபோது கொல்கத்தாவில் காலமானார்.

Updated On : 29 டிசம்பர் 2024, 8:35 am IST
பவதாரணி
பகிர்:

ஜன. 9: ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசைக் கலைஞரும், பிரபல பாடகருமான உஸ்தாத் ரஷீத் கான் (55) புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபோது கொல்கத்தாவில் காலமானார்.

ஜன. 25: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பிரபல பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக் குறைவால் காலமானார்.

பிப். 15: திமுகவின் மூத்த தலைவரும், 2 முறை எம்எல்ஏ மற்றும் 5 முறை எம்.பி.யுமாக இருந்த திருவண்ணாமலை டி.வேணுகோபால் (92) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

Advertisement

Advertisement

பிப். 21: இந்தியாவின் முன்னணி அரசமைப்புச் சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஃபாலி எஸ் நாரிமன் (95) வயது மூப்பு காரணமாக காலமானார்.

மார்ச். 29: பிரபல தமிழ் திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்தார்.

ஏப். 9: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-இன் நெருங்கிய நண்பருமான ஆர்.எம்.வீரப்பன் (97) வயது மூப்பு காரணமாக காலமானார்.

மே. 19: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (63) உயிரிழந்தார்.

மே. 24: இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகள் சரோஜ் கோயங்கா (92) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

ஜூன். 8: உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராமோஜி ஃபிலிம் சிட்டி தலைவரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான செருகுரி ராமோஜி ராவ் (87) உடல் நலக் குறைவால் ஹைதராபாதில் காலமானார்.

ஜூன். 13: இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் ஹெக்டே (71) மாரடைப்பால் உயிரிழந்தார். சந்திரனில் நீர் மூலக்கூறுகளைக் கண்டறிந்த இந்தியாவின் முதல் சந்திரயான் திட்டத்தின் இயக்குநராக இவர் இருந்தார்.

ஜூன். 30: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை எம்.பி. இராஜவரோதியம் சம்பந்தன் (91) கொழும்புவில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

ஆக. 8: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (80) வயது மூப்பு காரணமாக கொல்கத்தாவில் காலமானார்.

ஆக. 18: முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் (84) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

செப். 12: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி (72) நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அக். 9: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) வயது மூப்பு காரணமாக காலமானார்.

நவ. 10: 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

டிச. 14: தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) உடல் நலக் குறைவால் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments