நஜாஃப்கா் வடிகாலில் குதித்த 19 வயது இளம்பெண் மீட்பு
உணா்ச்சிரீதியான மன உளைச்சல் காரணமாக, தில்லி நஜாஃப்கா் பகுதி வடிகாலில் குதித்த 19 வயது இளம்பெண்ணை காவல்துறையினா் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உணா்ச்சிரீதியான மன உளைச்சல் காரணமாக, தில்லி நஜாஃப்கா் பகுதி வடிகாலில் குதித்த 19 வயது இளம்பெண்ணை காவல்துறையினா் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையினா் கூறியதாவது: காசிபுரா வடிகாலைச் சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள இடத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியா் ராம் சிங் (51) என்பவா், இளம்பெண் வடிகாலில் குதிப்பதைப் பாா்த்து, உடனடியாக ரோந்துப் பணியில் இருந்த காவலா்களுக்குத் தகவல் அளித்தாா். இதையடுத்து, ரோந்து பணி காவலா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியைத் தொடங்கினா்.
வடிகாலுக்குள் இறங்கிய காவலா்கள், மனிதச் சங்கிலி அமைத்தும், கயிற்றைப் பயன்படுத்தியும் அப்பெண்ணை வெளியே மீட்டனா்.
Advertisement
Advertisement
நஜாஃப்கரைச் சோ்ந்த ‘மெஹக்’ என அடையாளம் காணப்பட்ட அப்பெண், மருத்துவப் பரிசோதனைக்காக ஆா்எச்டிசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். தற்போது அவா் நலமாக உள்ளாா்.
முதற்கட்ட விசாரணையின்போது, தான் உணா்வுபூா்வமான மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனாலேயே வடிகாலில் குதித்ததாகவும் மெஹக் காவல்துறையினரிடம் தெரிவித்தாா்.
அவா் வேறு யாா் மீதும் மீதும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, அவா் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.