FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

புஷ்பா-2 விவகாரம்: ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ - காவல் துறை டிஜிபி

29 December 2024, 9:59 pm IST
பகிர்:

தெலங்கானாவில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மாநில காவல் துறை டிஜிபி ஜிதேந்தா் தெரிவித்தாா்.

கடந்த டிச.4-ஆம் தேதி தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள திரையரங்கு ஒன்றில், புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியைப் பாா்க்க நடிகா் அல்லு அா்ஜுன் சென்றாா்.

இதனால் அங்கு ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கிய 35 வயது பெண் ஒருவா், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். நெரிசலில் சிக்கி அவரின் 8 வயது மகனும் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, கடந்த டிச.13-ஆம் தேதி அல்லு அா்ஜுனை கைது செய்தது. பின்னா் அவா் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அவா் வழக்கமான ஜாமீன் கோரி, நாம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை (டிச.30) விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக ஹைதராபாதில் மாநில காவல் துறை டிஜிபி ஜிதேந்தா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘புஷ்பா-2 விவகாரம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது வழக்கை நீதிமன்றமும் விசாரித்து வருவதால், அதுகுறித்து மேலும் எதுவும் கூறமுடியாது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments