FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒருநாள் மழைக்கே மிதக்கும் அயோத்தி: ராமர் கோயில் செல்லும் சாலைகளில் வெள்ளம்!

ராமர் கோயில் சாலைகளில் அலட்சியமாகச் செயல்பட்டவர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது மாநில அரசு.

Updated On : 29 ஜூன் 2024, 12:18 pm IST
ராமர் கோயிலுக்குச் செல்லும் சாலை
பகிர்:

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலின் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருவதால், அலட்சியமாகச் செயல்பட்ட ஆறு அதிகாரிகளை அந்த மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராமர் கோயி்லுக்குச் செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோயிலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சாலையோரம் இருந்த வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் 14 கி.மீ நீளமுள்ள சாலையின் பல பகுதிகளில் குண்டும், குழிகளும், ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள ஸ்ரீராம் மருத்துவமனையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Advertisement

Advertisement

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம் மருத்துவமனை

ஆறு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

அயோத்தி ராமர் கோயில் சாலை கட்டுமானப் பணிகளில் அலட்சியமாக செயல்பட்ட குடிமை அமைப்பு அதிகாரிகளான துருவ் அகர்வால்(செயல் பொறியாளர், அனுஜ் தேஷ்வால்(உதவி பொறியாளர்) மற்றும் பொதுப்பணித் துறையின் பிரபாத் பாண்டே (இளநிலை பொறியாளர்), ஆனந்த் குமார் துபே(செயல் பொறியாளர்), ராஜேந்திர குமார் யாதவ்(உதவி பொறியாளர்) மற்றும் முகமது ஷாஹித் ஆகிய ஆறு அதிகாரிகளையும் மாநில அரசு அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத்தைச் சேர்ந்த புவன் இன்ஃப்ராகாம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்ரீராம் மருத்துவமனை வளாகம்

முன்னதாக ராமர் கோயிலின் மேற்கூரையில் நீர் கசிவதாக எழுந்த புகார் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாலைகளில் குழிகளும், பள்ளங்களும் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசின் முன்னுரிமையின் கீழ் செய்யப்பட்ட பணிகளில் அதிகாரிகளின் மெத்தனபோக்கால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments