FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையாலும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது: அமித் ஷா!

சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப் பின் வருங்கால சந்ததியினர் யாராலும் கொண்டுவர முடியாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

8 நவம்பர் 2024, 6:11 pm IST
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - படம் | பிடிஐ
பகிர்:

சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப் பின் வருங்கால சந்ததியினர் யாராலும் கொண்டுவர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரப் பேரணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், இந்தப் பிரசாரப் பேரணியில் முக்கியத் தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தின் சங்க்லி தொகுதியில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.

Advertisement

Advertisement

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப்பின்னர் அவரின் வருங்கால சந்ததிகளால்கூட கொண்டுவர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் மாநில சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க புதியதாக தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க்லி தொகுதியில் நடந்த பிரசாரத்தில் ஆளும் கட்சியான மஹாயுதியின் வேட்பாளர்கள் சுதிர் காடில் மற்றும் சஞ்சய் காகா பாட்டீல் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “சத்ரபதி சிவாஜியின் மண்ணில் இருந்து சொல்கிறேன். ராகுலால் மட்டுமல்ல, அவரின் நான்காம் தலைமுறையால்கூட சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது” என்றார்.

ராகுல் காந்தி அரசியலமைப்பையும், அம்பேத்கரையும், அவரை தேர்தெடுத்த மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் இடஒதுக்கீடு வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். மோடி அரசு இருக்கும் வரை யாராலும் அரசியலமைப்பு மீது கைவைக்கமுடியாது. எஸ்சி, எஸ்டி, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் இருந்தபடியே இருக்கும்” என்றார்.

மகராஷ்டிரத்தில் நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், நவம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments