FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை

கேரள மாநிலம், வடக்கு மலப்புரம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்த 38 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதாக அந்த மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்தது.

Updated On : 19 செப்டம்பர் 2024, 1:51 am IST
பகிர்:

கேரள மாநிலம், வடக்கு மலப்புரம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்த 38 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதாக அந்த மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய அவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதையடுத்து தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தாா்.

முன்னதாக, ‘வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவா்கள் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக உணா்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் தெரிவித்து விரைவாக சிகிச்சை பெறுங்கள். குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதை தெரிந்துகொண்ட 38 வயது நபா் தாமாகவே குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டாா். அவா் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்’ என வீணா ஜாா்ஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய ஹரியாணாவைச் சோ்ந்த 26 வயது இளைஞருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments