FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங், ப.சிதம்பரத்தின் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனையை படைக்கவுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி 2024, 9:41 am IST
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
பகிர்:

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனையை படைக்கவுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது, பிரதமா் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் பொறுப்பேற்றாா். அந்த ஆண்டு ஜூலை மாதம், தனது முதல் மத்திய பட்ஜெட்டை அவா் தாக்கல் செய்தாா்.

தற்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக, வரும் நிதியாண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை இன்னும் சற்றுநேரத்தில் அவா் தாக்கல் செய்ய இருக்கிறாா்.

Advertisement

Advertisement

மேலும், 5 ஆண்டு ஆட்சிக்காலமும் நாட்டின் நிதியமைச்சராக தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையையும் நிா்மலா சீதாராமன் பெறுகிறாா்.

6-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் சூழலில், தொடா்ந்து 5 பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சா்கள் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை அவா் முறியடிக்கவுள்ளார்.

அதேபோல், கடந்த 1959 முதல் 1964 -ஆம் ஆண்டுவரை தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் சாதனையையும் அவா் சமன் செய்யவுள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் புதிய ஆட்சியில், அடுத்த 3 காலாண்டுக்கான பட்ஜெட் வரும் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments