FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் கருத்து...

Updated On : 2 ஏப்ரல் 2025, 12:49 pm IST
கே.சி. வேணுகோபால்
பகிர்:

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது.

இந்த விவாதம் தொடர்பாக மக்களவையில் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:

Advertisement

Advertisement

“நீங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் குறித்து குறைந்தபட்சம் திருத்தங்கள் கூறுவதற்கு உறுப்பினர்களுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், நேற்று பகலில் தான் உறுப்பினர்களுக்கு திருத்த மசோதா வழங்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்குள் திருத்தங்களை கூற வேண்டுமென்றால் எப்படி முடியும்?

நீங்கள் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துகிறீர்கள். இதுபோன்ற சம்பவம் இந்த அவையில் நடந்ததே இல்லை. நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக ஆராய நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை விமர்சித்து கேரள மக்களவை உறுப்பினர் பிரேமசந்திரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

”உறுப்பினர் முக்கிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு விவாதத்துக்கு அனுப்பப்பட்டு விரிவான கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை அமைச்சரவை ஏற்றது. உங்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் காலத்தில் அமைக்கப்பட்ட குழு போன்று அல்ல, இது ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்ட குழு. குழுவின் திருத்தங்களை ஏற்காவிடில் எதற்காக குழு அமைக்கப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments