மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!
மனைவியை விட்டுவிட்டு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: குத்திக்கொன்ற இளம்பெண்!
மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகிராமில் வசித்து வந்தார். ஏற்கெனவே திருமணமாகி குழந்தை பெற்று தந்தையான அவருக்கு 27 வயதான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தில்லியின் அசோக் விஹாரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஓராண்டாக இருவரும் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர்.
இதனிடையே, தன் மனைவி, குழந்தைகளை அவ்வப்போது ஹரீஷ் பார்க்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய இணை, அவருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இருவருக்குமிடையே சண்டை முற்றியது. அதில் அவரை கத்தியால் சரமாரியாக அந்த இளம்பெண் குத்தினார். அதில் படுகாயமடைந்த ஹரீஷ் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
A woman in Gurugram stabbed her live-in partner as a days-long dispute allegedly over him meeting his wife and children continued to escalate. He died during treatment.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.