FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் வந்துகொண்டிருக்கும் விமானம் சற்றுநேரத்தில் தரையிறங்கவுள்ளது.

Updated On : 5 பிப்ரவரி 2025, 10:41 am IST
அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ - AFP
பகிர்:

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் வந்துகொண்டிருக்கும் விமானம் இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாபில் தரையிறங்கவுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. எத்தனை பேரை அமெரிக்கா அனுப்பியது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 205 பேர் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத் துறை இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தியாவில் குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 100-க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்துகொண்டிருக்கும் விமானத்தில் உள்ள 205 பேரின் குற்றப்பின்னணியை சரிபார்க்கும் நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறங்கியவுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல உதவியவர்கள் குறித்த தகவலை பெற விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வரும் 13-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றவுள்ளதாக அறிவித்தாா். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமா் மோடி நல்ல முடிவை எடுப்பாா் என பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய பின் கடந்த 27-ஆம் தேதி அவா் கூறினாா். சுமாா் 18,000 இந்தியா்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பும் முன் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்தியா்கள் என உறுதிசெய்யப்பட்டால் அவா்களைத் திருப்பி அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments