FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்!

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 20 பிப்ரவரி 2025, 7:00 pm IST
பகிர்:

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது. தில்லி முதல்வரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.

சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார். தில்லி அமைச்சர்களாக பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். பர்வேஷ் வர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பதவியேற்றுக்கொண்ட 7 அமைச்சர்களில் 5 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க... தில்லி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு!

இந்தக் குற்றவழக்குகளில் தில்லி முதல்வர் ரேகா குப்தாவும் மிக முக்கியமானவராகவும், அமைச்சர் ஆஷிஷ் சூட் அதிக குற்றவழக்குகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட சுய பிரமாணப் பத்திரங்கள் மூலமாக இந்த வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிதித்துறையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளனர்.

ராஜௌரி கார்டன் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான மஞ்சிந்தர் சிங் சிர்சா, அதிகபட்சமாக ரூ.248.85 கோடி வரை சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த குறைந்த சொத்துமதிப்பு கொண்ட அமைச்சராக காரவால் நகர் தொகுதி எம்எல்ஏ கபில் மிஸ்ரா ரூ.1.06 கோடியுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

7 அமைச்சர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.56.03 கோடியாக உள்ளது. அனைத்து அமைச்சர்களும் அவர்கள் மீதான கடன்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர். அவர்களில் புதுதில்லி எல்எல்ஏவும் தில்லி துணை முதல்வருமான பர்வேஷ் ஷாகிப் வர்மாவுக்கு ரூ.74.36 கோடி கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

7 அமைச்சர்களில் 6 பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். ஒருவர் மட்டும் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

இதையும் படிக்க... முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments