FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியா கூட்டணியில் விரிசல்; தில்லியில் பாஜக வெற்றி உறுதி - அமித் ஷா

தில்லியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார் அமைச்சர் அமித் ஷா

12 ஜனவரி 2025, 9:46 pm IST
அமித் ஷா - ANI
பகிர்:

இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தில்லியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதால், பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்ததாகவும், இதேபோன்று தில்லியிலும் நடக்கும் எனக் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது,

Advertisement

Advertisement

''இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலை என்ன? இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனையும் (உத்தவ் பிரிவு) காங்கிரஸும் அடுத்து வரவுள்ள மும்பை உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திக்கின்றன.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸும் தனித்துப் போட்டியிடவுள்ளன. சுயநலம் கொண்ட இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து பிளவு ஏற்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி எதிர்க்கட்சிகளை களக்கமடையச் செய்துள்ளது. மற்ற மாநிலங்களில் இது எதிரொலிக்கிறது. எதிர்க்கட்சிகளிடையே ஏற்படும் பிளவு பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments