FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் உயிராகப் பார்க்க வேண்டும்! -ராகுல் காந்தி

யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் ஒரு உயிராகப் பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி 2025, 9:47 pm IST
யமுனை நதியில் ராகுல் காந்தி.
பகிர்:

யமுனையை நீர்நிலையாக பார்க்காமல் ஒரு உயிராகப் பார்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிப்.5-ல் நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது தில்லியின் முன்னாள் முதல்வரான அரவிந்த் கேஜரிவால், தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதாகக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

கேஜரிவாலின் இத்தகைய கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கருத்தைக் கூறியதற்காக கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் வழக்கு தொடுக்க நேரிடும் எனவும் ஹரியாணா அரசு எச்சரித்தது.

இதையும் படிக்க | பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் அலுவலர்கள் சோதனை!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரவிந்த் கேஜரிவால், ஹரியாணா மற்றும் தில்லி மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொளியில், யமுனை ஆற்றில் படகு சவாரி செய்வது, படகு ஓட்டிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், யமுனையை வெறும் நீர்நிலையாக மட்டும் பார்க்காமல், ஒரு உயிராக நாம் பார்த்து அதை மதிக்க வேண்டும். அரசு யமுனை நதியை அதன் போக்கில் விட்டுவிட்டால், அதன் நிலையை மாற்ற நாம் ஒன்றாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யமுனை நதியை சுத்தம் செய்தவதற்கான உங்களிடம் ஏதேனும் ஆலோசனை இருந்தால், இந்த இணைப்பில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இந்திய மக்களின் குரலை நாங்கள் கேட்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | போராட்டம் நியாயமானது என்பதாலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! -அண்ணாமலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments