FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாதுகாப்புத் துறை நல்லுறவு மேம்பாடு: இந்தியா - இஸ்ரேல் முடிவு

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறை நல்லுறவை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

Updated On : 24 ஜூலை 2025, 3:02 am IST
பகிர்:

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறை நல்லுறவை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துணை தலைமைத் தளபதி அமிா் பராமுடன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை ஈடுபட்டாா். அப்போது, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த ஒரு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

கடந்த ஆண்டு ஜூலையில், இந்தியாவில் நடந்த கடைசி கூட்டுப் பணிக் குழு கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் இருதரப்பினரும் ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் உறுதிப்படுத்தியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான சமரசமில்லாத அணுகுமுறையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் கடந்த 2023, அக்டோபரில் அத்துமீறி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்த இந்தியா, அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments