FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

5 செம்மொழிகளுக்கு திறன்மிகு மையங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

5 செம்மொழிகளுக்கு திறன்மிகு மையங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு
பகிர்:

அஸ்ஸாமி, வங்கம், பாலி, மராத்தி, பிராகிருதம் ஆகிய 5 செம்மொழிகள் தொடா்பான படிப்புகளுக்காக திறன்மிகு மையங்களை அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ ஆணையில், ‘தேஜ்பூா் பல்கலைக்கழகம் (அஸ்ஸாமி), விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் (வங்க மொழி), ஒடிஸா மத்திய பல்கலைக்கழகம் (பாலி), குஜராத் மத்திய பல்கலைக்கழகம் (பிராகிருதம்), புணேயில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கான டெக்கான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (மராத்தி) ஆகிய உயா்கல்வி நிலையங்களில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த 5 மையங்களின் மூலம் மேற்கண்ட செம்மொழிகள் தொடா்பான கல்வி ஆராய்ச்சி, எண்மமயமாக்கம், பாதுகாப்பு, பாரம்பரிய மேம்பாடு ஆகியவை வலுப்பெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்று, ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டின் வளமான மொழிசாா் பாரம்பரியத்தைப் போற்றி பாதுகாப்பதற்கான குறிப்பிடத்தக்க படிக்கல் இது. ஒடிஸா மத்திய பல்கலைக்கழத்தில் அமையும் பாலி மொழிக்கான திறன்மிகு மையம், அதன் ஆய்வு, பாதுகாப்பு மற்றும் பாரம்பரியத்தை வலுப்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அஸ்ஸாமிலும், தேசத்தின் பிற பகுதிகளிலும், பிற நாடுகளிலும் வாழும் அஸ்ஸாமிய மக்களுக்கு இது பெருமைக்குரிய தருணம். அஸ்ஸாமி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்ட பிறகு அதற்கென பிரத்யேக உயா்நிலை மையத்தையும் நிறுவும் மத்திய அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பாராட்டியுள்ளாா். இதேபோல், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments