5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பு ஏற்பாடு!
செபி தலைவர் துஹின் காந்த பாண்டேவுக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பு ஏற்பாடு
செபி தலைவர் துஹின் காந்த பாண்டேவுக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பை செபி ஏற்பாடு செய்துள்ளது.
மார்ச் மாதத்தில் செபி தலைவராகப் பதவியேற்ற துஹுன் காந்த பாண்டேவுக்கு சொகுசு குடியிருப்பை செபி ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய மும்பையின் பிரபாதேவி பகுதியில், 3,000 சதுரஅடி பரப்பளவில் 5 படுக்கையறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை, மாத வாடகையாக ரூ. 7 லட்சத்துக்கு செபி ஏற்பாடு செய்துள்ளது.
Advertisement
Advertisement
4 கார் பார்க்கிங் வசதிகொண்ட இந்தக் குடியிருப்புக்கு வைப்புத்தொகையாக ரூ. 42 லட்சம் செலுத்தப்பட்டதுடன், 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
செபி அலுவலகத்தில் இருந்து அரைமணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பின் வாடகையானது, முதலாண்டில் ரூ. 7 லட்சமாகவும், இரண்டாம் ஆண்டில் ரூ. 7.35 லட்சமாகவும், மூன்றாம் ஆண்டில் ரூ. 7.71 லட்சமாகவும் வருடாந்திர உயர்வுடன் செலுத்தப்படும்.
செப்டம்பர் 3 ஆம் தேதியில் பதிவு செய்யப்பட்ட இந்தக் குடியிருப்புக்கு, முத்திரைக் கட்டணமாக மட்டும் 69,500 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 1,000 ரூபாயும் செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க: உச்சநீதிமன்ற வாசலிலேயே சாக்கடைக் கழிவை அகற்றிய தொழிலாளர்கள்! ரூ. 5 லட்சம் அபராதம்!
Sebi Rents Luxury Apartment For Chairman At Rs 7 Lakh A Month In Mumbai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.