FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டெரிவேட்டிவ் முதிா்வு நாள் விலை கணக்கீடு: கருத்துக் கேட்கும் செபி

பங்கு மற்றும் குறியீட்டு டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் முடிவடையும் நாளில், அதற்கான இறுதி விலையை முடிவு செய்யும் முறையில் சில மாற்றங்களைச் செய்ய செபி முன்வந்துள்ளது.

13 செப்டம்பர் 2026, 6:07 am IST
பகிர்:

பங்கு மற்றும் குறியீட்டு டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் முடிவடையும் நாளில், அதற்கான இறுதி விலையை முடிவு செய்யும் முறையில் சில மாற்றங்களைச் செய்ய செபி முன்வந்துள்ளது.

பங்குச் சந்தையின் ரொக்கப் பிரிவில் சந்தை நிறைவடையும் நேரத்தில், இறுதி விலையைத் தீா்மானிப்பதற்கு வா்த்தக நிறைவு ஏல முறையில் (சிஏஎஸ்) கடந்த ஆக. 3 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் முடிவடையும் நாளில், ‘ஆப்ஷன்ஸ்’ வா்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட நாளில் இறுதி விலையை கணக்கிடுவது குறித்து 2 முன்மொழிவுகளை முன்வைத்துள்ள செபி, வா்த்தகா்கள் மற்றும் பங்குதாரா்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரும் அக். 3-க்குள் தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments